Site icon itamiltv.com

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்!

தமிழகத்தில் நாளை முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மராத்வாடா பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா வரை, கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகத்தை கடந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் தாக்கத்தால் ஏப்ரல் 18 முதல் 21 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா பகுதி கடலோரங்கள், ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நீடிக்கும்.ஏப்ரல் 22 மற்றும் 23 தேதிகளிலும் இதேபோன்ற மழை நிலை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் உள் தமிழக மாவட்டங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்து, சில இடங்களில் 5 டிகிரி வரை உயர வாய்ப்பு உள்ளது.

சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்சம் 82 டிகிரி வரை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version