தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கில் பள்ளி,கல்லூரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் அமலுக்கு வரும் ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னவென்பதை பார்க்கலாம்..
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலனுக்காகவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.