புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத்திட்ட சமையல் கூடத்தில் மனிதக்கழிவு பூசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மேட்டூர் அருகே காவேரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் காலை உணவுத்திட்ட சமையல் கூடத்தில் மனிதக்கழிவு பூசப்பட்ட சம்பவம் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாசலம், கொளத்தூர் வட்டாட்சியர் முருகன், காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து ஆகியோர் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்பு தூய்மைப் பணியாளர்கள் மூலம் காலை உணவுத்திட்ட சமையற்கூடம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது :
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், இரவு நேர காவலாளி இல்லாததாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டினர்.இதையடுத்து பள்ளிக்கு தேவையான சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனே செய்திட கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.