ஏர் இந்தியாவை வாங்கியதா டாடா- மத்திய அரசு கூறிய விளக்கம் ?

tata-takeover-air-india-for-national-carrier-air-india
tata takeover air india for national carrier air india

பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்கும் ஏலத்தில், டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக 1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. பின்னர் அதன் பெயரை 1946-ல் ஏர் இந்தியா என டாடா குழுமம் மாற்றியது. 1953-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான நிறுவனம் அரசுடமை ஆக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு நிறுவனமாக ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து இயங்கியது. அதன் பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை, லாபத்தில் இயங்கி வந்த நிறுவனம் வருவாய் இழப்பை சந்தித்தது.

tata-takeover-air-india-for-national-carrier-air-india
tata takeover air india for national carrier air india

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில், டாடா குழுமம் 67 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந் நிறுவனத்தை கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகை மற்றும் திட்டத்தை அமித் ஷா தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை என மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

Total
0
Shares
Related Posts