நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான விடாமுயற்சி படத்தின் டீஸர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் திரைப்படமே ‘விடாமுயற்சி’. லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்க உள்ளார் .
அஜித் , திரிஷா , ஆரவ் , அர்ஜுன் என ஏராளமான நட்சத்திரங்கள் ஒன்றுகூடி நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் BTS காட்சிகளை படக்குழு வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலரை காண அஜூத் ரசிகர்கள் அவளாக காத்திருந்த நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
எல்லாரும் , எல்லாமும் கைவிடுமும் உன்னை நீ நம்பு என வரும் மிடுக்கான வசனங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீஸர் இதோ..