மகாராஷ்டிராவில் லக்கி பாஸ்கர் படத்தில் வருவது போல் விரைவில் பணக்காரராக வாழ வேண்டும் என நினைத்து இளைஞர் ஒருவர் ‘UNLucky Baskhar’-ஆக போலீசில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாதம் ரூபாய் 13,000 சம்பளத்திற்கு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஹர்ஷ் குமார் என்பவர் திடீரென தனது காதலிக்காக BMW கார், சொகுசு வீடு என வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார்.
Also Read : சூரியனை நெருங்கிய நாசா விண்கலம்..!!
ஹரிஷ் குமாரின் இந்த சொகுசு வாழ்க்கையும் கண்டு அவருடன் வேலைசெய்பவர்கள் அவர் மேல் சந்தேகமடைந்துள்ளனர் . இதையடுத்து அவரது அன்றாட பணியை அவர்கள் கண்காணித்து வந்த நிலையில் ஒரு நாள் அவரிடம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஹரிஷ் குமார் புதிதாக வங்கிக் கணக்கு ஒன்றை திறந்து அரசு நிதியை தனது Account-ல் வரவுவைத்து வந்தது அம்பலம் ஆகியுள்ளது. சுமார் ₹21 கோடி வரை அவர் கையாடல் செய்ததாக கூறப்படும் நிலையில் ஹாரிஸ் குமாரை சக ஊழியர்கள் போலீசில் பிடித்து கொடுக்க அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.