”ஆஸ்துமா நோயாளிகளுக்கான மீன் பிரசாதம்..” தெலுங்கானாவில் இன்று தொடக்கம்!!

தெலுங்கானாவில் ஆஸ்துமாவை குணப்படுத்துவதாக நம்பிக்கொண்ட மீன் பிரசாதம் மீண்டும் துவங்கியது.

வாழ்க்கை முறையின் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இந்தியாவின் பல நகரங்களில் காற்றில் தூசியும் கலந்து மாசுபாடு காணப்படுகிறது. இந்த தூசியில் உள்ள சிறு துகளை சுவாசிப்பதால் தூண்டப்படும் விளைவினால் ஒவ்வாமை ஏற்படுகிறது.

மேலும் சிகரெட் புகை, சமையல் புகை, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை என பல வகைகளில் வெளியாகும் புகையின் காரணமாகவும் ஒருவருக்கு ஆஸ்துமா ஏற்படுகிறது.

இதுமட்டும் அல்லாமல்,வாசனை திரவியம், பாடி ஸ்பிரே,கழிவுகளின் வாசனை என ஏதாவது ஒரு வாசனையினால் ஒவ்வாமை தூண்டப்பட்டு ஆஸ்துமா ஏற்படுகிறது.இந்தியாவில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உரிய மருந்தும், சிகிச்சையும் எடுத்துக் கொள்வதில்லை.

இந்த நிலையில்,தெலுங்கானாவில் ஆஸ்துமாவை குணப்படுத்துவதாக நம்பிக்கொண்ட மீன் பிரசாதம் மீண்டும் துவங்கியது.கடந்த 3 ஆண்டுகளாக கொரனோ தொற்று பாதிப்பு காரணமாக வழங்கப்படாமல் இருந்த இந்த நிகழ்வு 3 ஆண்டுகளுக்கு பிறகு துவங்கியுள்ளது.

இதனை தெலுங்கானா அமைச்சர் தலஷானி சீனிவாசன் நாம்பள்ளி கண்காட்சி மைதானத்தில் துவக்கி வைத்தார். 177 ஆண்டுகளாக பதானி குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.இந்த நிகழ்வில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு உயிருள்ள மீனின் வாயில் மூலிகை மருந்தை அடைத்து விழுங்குகிறார்கள்.

இந்த சிகிச்சைக்காக கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆஸ்துமா நோயாளிகள் வருகின்றனர்.

தற்போதயை நிகழ்வுக்கு சுமார் 5 லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த சிகிச்சை முறைக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.

Total
0
Shares
Related Posts