உதயநிதி ஸ்டாலினின் அம்மாவை மிகவும் நான் பாராட்டுகிறேன்-தமிழிசை ‘நச்!!’

உதயநிதி ஸ்டாலினின் தாய் துர்கா ஸ்டாலினை மிகவும் நான் பாராட்டுகிறேன் துர்கா ஸ்டாலின் இந்து மதத்திற்கு தற்போது கிரீடம் சூட்டி வருகிறார் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள காமராஜர் மருத்துவமனையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக ஸ்டெம் செல் சிகிச்சை மருத்துவமனையை தெலுங்கானா ஆளுநர் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் ஆகிய தமிழிசை சௌந்தர்ராஜன் தன் கணவருடன் வந்து ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ஸ்டெம்செல் சிகிச்சை முறை குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன்,

கல்வியில் முதல் முதல் புரட்சி ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை குறிப்பிட்டு சொல்வேன் எல்லா மக்களும் கல்வியை பயின்றாக வேண்டுமென்ற ஒரு அடிப்படை ஏற்படுத்திக் கொடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர் மட்டுமே என குறிப்பிட்டு பேசினார்.

இதனை தொடர்ந்து சனாதனத்தை ஒழிப்பதாக கூறிய உதயநிதி ஸ்டாலின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பிய போது, சனாதனத்தை பற்றி பல பேர் பலர் சொல்லி இருந்த போதும் தற்போது தம்பி மிகவும் பதற்றத்தில் இருப்பதாக உதயநிதி ஸ்டாலினை சுட்டிக்காட்டி பேசினார்.சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன என்றால் அழிக்க முடியாது இது வாழ்வியல் முறை.

அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினின் தாய் துர்கா ஸ்டாலினை மிகவும் நான் பாராட்டுகிறேன் என்று அவர், துர்கா ஸ்டாலின் இந்து மதத்திற்கு தற்போது கிரீடம் சூட்டி வருகிறார்.

குருவாயூர் சென்று அங்குள்ள சுவாமிக்கு என்ன கொடுத்தார் என்பதை நான் பார்த்தேன் என பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் நிச்சயம் அவர்களின் குடும்பத்தை நான் பாராட்டுகிறேன் என்ன காரணம் என்றால் தர்மத்தை நல்ல முறையில் பின்பற்றுபவர்களுடைய காரணத்தினால் தான் இவர்கள் எல்லாம் நல்ல முறையில் இருக்கிறார்கள் வாழ்கிறார்கள்.

மேலும் சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சொல்வதற்கு முன்பாக, உன் தந்தையிடம் சென்று முதல் வேலையாக இந்து அறநிலத்தை என்ற ஒரு துறையை வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும் என உதயநிதி ஸ்டாலிடம் தமிழிசை சௌந்தராஜன் கேட்டுக் கொண்டார்.

கோயில் வேண்டாம் சாமி வேண்டாம் என்று சொல்லும் நீங்கள் உண்டியல் மட்டும் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் அதனால் தான் நான் இதைச் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.

Total
0
Shares
Related Posts