Site icon ITamilTv

இஸ்ரேல் – ஈரான் எல்லைகளில் நீடிக்கும் பதற்றம் – வெளியான சமீபத்திய தகவல்கள்..!!

israel iran war

israel iran war

Spread the love

ஈரான் – இஸ்ரேல் இடையே ராணுவப் போர் மூண்டுள்ள நிலையில் தற்போது இதுகுறித்த (israel iran war) சமீபத்திய தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இஸ்ரேல் – ஈரான் ராணுவ போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் அனைவரும் மரண பயத்தில் செய்வதறியாது உயிரை காப்பாற்றிக்கொள்ள நாடோடிகளாக எல்லைகளை கடந்து வருகின்றன.

ஆயிரக்கணக்கான ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. அவற்றை இடைமறித்து அழித்துவருகிறோம்
இஸ்ரேலின் ராணுவ தளங்களில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும், பெரிய அளவில் சேதம் என ஈரானும் கூறியுள்ளன.

அண்டை நாடுகளான ஜோர்டான், ஈராக், லெபனான் தங்களது வான் பரப்பை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளன.

Also Read : https://itamiltv.com/bjps-lok-sabha-election-manifesto-do-you-know-what-promises-are-there/

ஈரானின் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மத்திய கிழக்கு நாடுகள் இடையே பெரிய அளவில் மோதல் நிகழாமல் தடுக்க இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன.

இஸ்ரேல் மீதான தாக்குதலை அடுத்து தேசிய பாதுகாப்புக் குழுவுடன் அமெரிக்க அதிபர் பைடன் ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில் பைடனின் பலவீனமான செயல்பாடே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலுக்கு காரணம் என முன்னாள் அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார் .

மேலும் ஈரானின் இந்த கொடூர தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் (israel iran war) கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேல், ஜோர்டான், ஈராக் உடன் பிரிட்டன் துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version