விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து..!!

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்தியாவில் மிகவும் பிஸியாக இயங்கப்படும் மீன்பிடி துறைமுகங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .

இந்த பயங்கர தீவிபத்தில் சுமார் 60 கும் மேற்பட்ட படகுகளும் , கணக்கிட முடியாத அளவில் மீன்பிடி வலைகள் எரிந்து வரும் வருவதாக மீனவர்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்து வருகின்றனர் .

அடையாளம் தெரியாத நபர், படகுகளுக்கு தீ வைத்ததாக மீனவர்கள் சந்தேகிக்கும் நிலையில் இதகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

படகுகளில் டீசல், எண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளதால் தீயை கட்டுப்படுத்தும் பணி சற்று சவாலாக இருப்பதாகவும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் முதற் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

Total
0
Shares
Related Posts