சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயால் (chile forest fire) பலியானோர் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான சிலியில் (chile forest fire) கடலோர நகரமான வினாடெல்மாரை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது.
வேகமாக பரவிய இந்த காட்டுத் தீயால் எஸ்ட்ரெல்லா, நவிடாப் உள்ளிட்ட நகரங்களும் எரிந்து நாசமாயின.
கொழுந்து விட்டு எரியும் இந்த தீயில் கருகி ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் எலும்புக் கூடாக காட்சியளிக்கிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளித்துள்ள நிலையில் தீ பரவாமல் இருக்க விமானம் மூலம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் அந்நாட்டு தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறனர்.
சிலி காட்டுத்தீயில் இருந்து அடர்த்தியான சாம்பல் புகை கடலோர நகரங்களை மூடியது.
மேலும், தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மத்திய பகுதிகளான வினா டெல் மார் மற்றும் வால்பரைசோவில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய கட்டாயப்படுத்தினர்.
இந்த தீ விபத்தில் 51 பேர் உடல் கருதி உயிரிழந்த நிலையில், பலர் படுமோசமான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : sutlej ஆற்றில் மாயமான வெற்றி! தகவல் அளித்தால் ரூ.1 கோடி-சைதை துரைசாமி!
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் பலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த தீ விபத்தில் 112 பேர் உயிரிழந்துள்ளதாக சிலி தடயவியல் மருத்துவத்துறை நேற்று தகவல் தெரிவித்திருந்தது.
இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து 122 ஆக உயர்ந்துள்ளது
இந்த திடீர் தீவிபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றின் வேகம் காரணமாக மரக்கிளைகளுக்கு இடையிலான உராய்வுகளே இந்த காட்டுத் தீக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அங்கு, அவசர நிலை பிரகடனப்படுத்தி உள்ளது.