சென்னையில் புத்தாண்டு அன்று இளைஞர் ஒருவரை 3 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரின் முக்கிய பகுதியான காசிமேடு அருகே இளைஞருக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிவிட்டு அவரை வெட்டி கொலை செய்து தப்பிய மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தெருவில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை யார் என குமரேசன் ( உயிரிழந்தவர் ) கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சரவணன், ஆகாஷ், அபினேஷ் ஆகிய 3 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். மேலும் குமரேசன் தாக்கப்படுவதை கண்டு அதை தடுக்க வந்த அவரது தந்தை மற்றும் உடனிருந்த நண்பரையும் அந்த மூவர் தாக்கியுள்ளனர்.
Also Read : தள்ளிப்போகும் ‘விடாமுயற்சி’ பட ரிலீஸ் – ஏமாற்றத்தில் அஜித் ரசிகர்கள்..!!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கும்பரேசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.