தமிழகம் முழுவதும் இன்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் முருகப்பெருமாமின் (Om Muruga) அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது .
அந்தவகையில் இன்று திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலிலும் ஏரளமான பகதர்கள் கூடி நின்று தரிசனம் செய்தனர் .
இதேபோல் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோயிலை சுற்றி பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது
வடலூர் சத்தியஞான சபையில் 153 வது தைப்பூச ஜோதி தரிசன விழா சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்ற கோஷத்துடன் பயபதியுடன் வழிபட்டு சென்றனர் . தைப்பூசத்தை முன்னிட்டு வடலூரில் 800 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி
இதையடுத்து உலகிலேயே மிக உயரமான ஸ்ரீ முத்துமலை முருகன் கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் முருகனை தரிசித்து வருகின்றனர்.
திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் மத்தியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – தங்கவேல் உள்ளிட்ட ஆபரணங்களுடன் தீபாராதனை காட்டப்பட்டது அப்போது பக்தி பாடல்களை பாடி காவடி செலுத்தி வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றினர் .
பழனி மலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பூச நட்சத்திரத்தில் சூரிய பகவானுக்கு தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்யப்பட்டது.
Also Read : https://itamiltv.com/west-bengal-cm-car-accident/
காலை 7 மணி வரை சுமார் 50 ஆயிரம் பேர் மலைக் கோயிலுக்கு (Om Muruga) தரிசனத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று தைப்பூசத் திருநாளை ஒட்டி சிவன், முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் அதிகாலை முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் பெரும் திரளான பக்தர்கள் மனமுருக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.