2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ். தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாட உள்ளதாக சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், தோனியின் நெம்பர் 7 ஜெர்ஸியை பகிர்ந்து ‘மேஜர் மிஸ்ஸிங்’ எனப் பதிவிடப்பட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தியும் ஏற்படுத்தி இருந்தது.
Also Read : நவ. 6இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!
இதனால் ஒரு தரப்பினர் தோனி ஓய்வை அறிவிக்கவுள்ளார் என்றும் மறு தரப்பினர் சிஎஸ்கே ஜெர்ஸி மாறப்போகிறது அதனால் தான் இப்படி பதிவிட்டுள்ளார்கள் என்றும் அவரவருக்கு தோன்றும் கருத்துகளை இணையத்தில் தெளித்து வந்தனர் .
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாட உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச போட்டிகளில் விளையாடி 5 ஆண்டுகளை கடந்த இந்திய வீரர்களை uncapped Player ஆக தக்க வைக்கலாம் என்ற விதிப்படி, 4 கோடிக்கு தோனியை சிஎஸ்கே அணி தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.