ITamilTv

”விஜய்யின் கடைசிப் படம்..” இயக்குநர் யார் தெரியுமா ? – வெளியான புதிய தகவல்!

நடிகர் விஜய்

Spread the love

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் G.O.A.T. படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.இந்த படம் அவரது 68 வது திரைப்படம் ஆகும்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் படத்தைத் தயாரித்துள்ளது.

நடன இயக்குனர் பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் உடன் நடிக்கிறார்கள். G.O.A.T. படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் மாஸ்கோ உள்பட சில இடங்களில் நடக்கயிருக்கிறது.

இந்தப் படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,அண்மையில் ,தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கினார்.இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பாஜகவில் இணையும் சத்தியராஜ் மகள்?வெளியான அறிவிப்பு!

மேலும் அரசியல் துறையில் விஜய் கட்சி தொடங்கியுள்ளது ஒரு புறம் ஆதரவையும், மறுபுறம் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

இந்த நிலையில் G.O.A.T. படத்துக்குப் பிறகு ஒரேயொரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்றும், அதன் பிறகு முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.

இப்படியான சூழலில் விஜய் 69 வது படத்துடன் தனது நடிப்பு வாழ்க்கையை முடித்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவரது கடைசிப் படத்தை இயக்குகிறவர் யார் என்ற கேள்வி சில நாட்களாக எழுப்பப்பட்டு வந்த நிலையில் , ஒரு சில சூப்பர் ஹிட் கொடுத்த வெற்றிமாறன் உள்ளிட்ட இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டன.

ஆனால் இது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது .அதில் ராஜாராணி,தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய அட்லி விஜய்யின் கடைசிப் படத்தை இயக்குகிறார்.

இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1764601239311200429?s=20

இதில் சமந்தா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் , சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிப்பதாகவும், அனிருத் இசையமைப்பார் எனவும் கூறப்படுகிறது.

குறிப்பாக இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜயின் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் அட்லி அனைத்துத் தரப்பினரையும் கவரக்கூடிய பிரமாண்ட கமர்ஷியல் படம் எடுப்பது தனித்திறமை.

விஜய் தனது கடைசிப் படத்தை இயக்க, அட்லியை தேர்வு செய்திருந்தால், அது சிறப்பான முடிவாக இருக்கும் என்று பலரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் விஜய் 69 படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவராத நிலையில் விஜய்யின் கடைசிப் படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.


Spread the love
Exit mobile version