ITamilTv

ஃபேன் பாயாக மாறிய தளபதி விஜய்..! வைரல் புகைப்படம்

Spread the love

பிரம்மாண்டமாக உருவாகும் தளபதி 68 படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் விஜய் அங்குள்ள திரையரங்கில் ஃபேன் பாயாக மாறி ஹாலிவுட் படம் பார்த்த புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது .

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற மாஸ் பட்ஜெட் படத்தை வெற்றிகரமாக முடித்துள்ள நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இதுற்கும் தனது 68 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத (தளபதி 68) இப்படத்தை படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது . நெடுநீண்ட இடைவெளிக்கு பிறகு BGM கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பணிகளுக்காக நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பறந்து சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரபல கிரியேட்டிவ் ஸ்டுடியோ ஒன்றில் ‘தளபதி 68’ பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தளபதி 68 படத்திற்கான 3D ஸ்கேனிங் மற்றும் vfx பணிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் USC Institute for creative Technologies நிறுவனத்தில் நடைபெறுகிறது. இந்நிறுவனம் இதற்கு முன் Avatar, Blade Runner 2049, Maleficent, Fast and Furious, The Jungle Book, Ready Player One போன்ற படங்களின் vfxல் பணியாற்றியுள்ளது. இரண்டு முறை ஆஸ்கர் விருதும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்கா வந்துள்ள தளபதி விஜய் அங்குள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஈக்வலைஸர் 3’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துள்ளார்.

அப்போது படத்தின் ஒரு காட்சியின்போது ஃபேன் பாய் போன்று எழுந்து நின்று தன் கைகளை விரித்து பரவசமாக கொண்டாடியுள்ளார் நடிகர் விஜய் . இந்த அழகிய தருணத்தை அலகேக்காக படம் பிடித்த இயக்குனர் வெங்கட் பிரபு அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .


Spread the love
Exit mobile version