தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் வெளியான ட்ராமா திரைப்படம் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்ததா இல்லையா என்பது குறித்த ஒரு சிறு அலசலை இங்கு பார்க்கலாம்.
கடந்த மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியான திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன், பிரதோஷ், பூர்ணிமா ரவி, ரமா, மாரிமுத்து, அஸ்வின் நாக், ஈஸ்வர், பிரதீப் கே.விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏராளமான இளம் நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ள இந்த படம் செயற்கை கருத்தரிப்பு என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் குறித்து பேசப்பட்டிருக்கிறது.
கதையின் ஆதார மையமாக விவேக் பிரசன்னா, சாந்தினி இருவரும் திகழ்கின்றனர். அதற்கேற்ற நடிப்பு அவர்களிடத்தில் இருந்து வெளிப்பட்டுள்ளது.
Also Read : திரையரங்குகளில் வாகை சூடியதா விக்ரமின் வீர தீர சூரன்..!!
மேலும் இப்படத்தில் இளம் ஜோடியாக பூர்ணிமா ரவி, பிரதோஷ் இருவரும் நடித்துள்ளனர். அவர்களது ‘பெர்பார்மன்ஸ்’ சாதாரணமாக நாம் தினசரி வாழ்வில் எதிர்கொள்கிற ஒரு ஆண் பெண்ணை நினைவூட்டுகிறது.
படத்தின் சில இடங்களில் சிரிக்க முடிந்தாலும், அந்த காட்சிகளில் பழைய நெடி தென்படுவதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். இது போக சஞ்சீவ், வையாபுரி, மாரிமுத்து, ரமா, அனந்த் நாக், நமோ நாராயணா, பிரதீப் கே.ராஜன், அருவி பாலா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
ஆகா மொத்தம் இப்படம் நல்லதொரு ‘த்ரில்லர்’ படம் பார்க்கிற எண்ணத்தைத் தொடக்கத்திலேயே விதைத்துவிடுகிறது ‘ட்ராமா’. மொத்தத்தில் இப்படத்தில் ஒரு முறை அமர்ந்து பார்க்கலாம்.