சீயான் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியானது..!!

சீயான் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குநரான பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விகாரம் நடிப்பில் சத்தமின்றி உருவான படம் தங்கலான். ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 26-1-24 அன்று உலகம்முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தங்கலான் படத்தின் டீசர் தற்போது வெளியாகிவுள்ளது . 1.32 நிமிடம் உள்ள டீசரில் ஆரம்பம் முதல் முடிவு வரை சண்டையும் ரத்தமும்மாக உள்ளதால் படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என நன்றாக தெரிந்துவிட்டது .

மேலும் இப்படம் கண்டிப்பாக விக்ரமின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியை தேடி தரும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் .

இதோ நீங்களும் அந்த டீசரை பாருங்கள்…

Total
0
Shares
Related Posts