திமுக இளைஞரணி மாநாட்டின் (Youth Wing Conference) வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய ஒன்றியத்தில் இப்படி ஒரு மாநாடு நடந்திடவேயில்லை என்கிற வகையில், நம் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தி முடித்துள்ளோம்.
மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன் வைத்து நடைபெற்ற நம் மாநாட்டின் (Youth Wing Conference) வெற்றிக்காக உழைத்த கழக நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள்,
மேலும் வருகை தந்து சிறப்பித்த லட்சோப லட்சம் இளைஞரணி தம்பிமார்கள் அனைவருக்கும் எனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வழக்கமாக தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் மாநாட்டினை நடத்துவார்கள். ஆனால், இந்த முறை நம் தி.மு.கழக இளைஞர் அணிக்கு மாநாடு நடத்துகிற வாய்ப்பை நம் கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்தார்கள்.
இதையும் படிங்க : Headlines : இன்றைய தலைப்புச் செய்திகள்
2007 ஆம் ஆண்டு இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டை நடத்திக் காட்டிய நம் முதலமைச்சர் அவர்கள், 2024-ல் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்திட பணித்ததோடு, அதற்கான ஊக்கத்தையும் – உற்சாகத்தையும் தந்தார்கள்.
கழகத் தலைவர் நம் முதலமைச்சர் அவர்களுக்கு என் அன்பும், நன்றியும்.
நம்முடைய சேலத்துச்சிங்கம் வீரபாண்டியாரின் சேலம் மண்ணில் இந்த மாநாட்டை நடத்துவது என்று முடிவான போதே, இந்த மாநாட்டின் வெற்றியும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
மாநாடு நடக்கும் இடம் சேலம் என்று நமது தலைவர் அவர்கள் அறிவித்த அடுத்த நொடியிலிருந்து,
வில்லிலிருந்து புறப்படும் அம்பு போல கழக முதன்மை செயலாளர் – மாண்புமிகு அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்கள் களத்தில் இறங்கி செயலாற்றத் தொடங்கினார்கள்.
அனைவருக்கும் நன்றி! – அமைச்சர் உதயநிதி
நமது தலைவர் அவர்கள், அவர்களது உரையில் “மாநாடு நடக்கும் இடத்தில் நேரு இருப்பார்,
அல்லது, நேரு இருக்கும் இடத்தில் மாநாடு நடக்கும்” என்று பாராட்டியதைப் போல; தான் ஒரு செயல் புயல் என்று மாநாட்டின் ஏற்பாட்டின் மூலம் நிரூபித்தார்.
மேலும், மாநாட்டுத்திடல் மட்டுமன்றி சேலம் மாவட்டம் முழுவதுமே பாதுகாப்பு பணிகளை ஒருங்கிணைத்த காவல்துறை அதிகாரிகள் – அலுவலர்கள் – மாநாட்டிற்கான தன்னார்வலர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
மாநாட்டுத்திடலில் சமையற்கூடத்தில் பணியாற்றியவர்கள் – உணவு பரிமாறியவர்கள் ஒளி – ஒலி அமைந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
நேற்று வரை நமது மாநாடு தான் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாக இருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் நமது கழகம் பொறுப்போகிற மாபெரும் வெற்றி எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது.
எனவே, மாநாடு முடிந்து விட்டது சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று இளைஞர் அணி தோழர்கள் எண்ணிவிட வேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் மிகஅருகில் வந்துவிட்டது.
இதுவரை உழைந்துவிட்டு இனி ஓய்வெடுத்தான் அது முயல் – ஆமை கதையாய் முடிந்து விடும். உங்களின் சுறுசுறுப்பை நீங்கள் மேலும் கூட்ட வேண்டும்.
நமது மாநாட்டின் நோக்கம் “மாநில உரிமைமீட்பு”, அந்த நோக்கத்தை நாம் வென்றாக வேண்டுமென்று தெரிவித்தார்.