சென்னையில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் பூ வியாபாரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள கணேஷ் அவென்யூ பகுதியில் வீட்டின் பால்கனியில் இருந்த வரலட்சுமி (50) என்பவர் கயிறு மூலம் கூடையை கீழே போட்டு பூ வியாபாரிக்கு அனுப்பியுள்ளார்.
அப்போது பால்கனி உடைந்து சிமெண்ட் தளம் பூ வியாபாரி கிருஷ்ணமூர்த்தியின் தலையில் விழுந்துள்ளது . இந்த விபத்தில் படுகாயமடைந்த பூ வியாபாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
அதேசமயம் கீழே விழுந்த வரலட்சுமி, காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது . இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.