Site icon ITamilTv

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு..!!

Ibrahim Raisi

Ibrahim Raisi

Spread the love

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் பல மணிநேர போராட்டத்திற்கு ( Ibrahim Raisi ) பின் மீட்கப்பட்டுள்ளது .

தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடங்கள் நேற்று அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டன .

ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாக கூறப்படும் நிலையில் ஹெலிகாப்டரை தேடும் பணிகளை முடுக்கிவிடப்பட்டது.

மோசமான வானிலையால், விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப்படையினர் செல்வதில் சிக்கல் ஏற்படித்திருந்த நிலையில் டிரோன்கள் மூலம் மீட்புப் பணி தீவிரபடுத்தப்பட்டது.

Also Read : தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ரெட் அலர்ட்..!!

இதையடுத்து விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்தன .

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் பல மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது .

இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது

விபத்து நடந்த அசர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் ( Ibrahim Raisi ) மீட்கப்பட்டு . ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது .


Spread the love
Exit mobile version