ஜிம்பாப்வேவில் பயங்கர விலங்குகள் குடியிருக்கும் அடர்ந்த காட்டில் 8 வயது சிறுவன் 5 நாட்களாக தனியாக உயிர்வாழ்ந்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜிம்பாப்வே நாட்டில் உள்ள அடர்ந்த காட்டில் வழிதவறிய டினோடென்டா என்ற 8 வயது சிறுவன் பழங்களை சாப்பிட்டு, குச்சி மூலம் பள்ளம் தோண்டி தண்ணீர் வரவைத்து 5 நாட்களாக உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.
சிறுவன் காணாமல் போனதாக வன காப்பாளர்களிடம் பெற்றோர் கண்ணீர் மல்க புகார் அளிக்க, சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் அவர் கண்டறியப்பட்டுள்ளார். சிங்கங்களும் வன விலங்குகளும் அதிகம் உலாவும் பகுதியில் சாமர்த்தியமாக செயல்பட்ட சிறுவனை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர்.