உத்தரப் பிரதேசதில் அதிவேகமாக கார் ஓட்டிய சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் மகள் கண்முன்னே தாய் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் 17 வயது சிறுவன் தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார் . அப்போது அவ்வழியே மகளுடன் ஒரு தாய் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார் . இந்த பக்கம் அதிவேகமாக சிறுவன் ஓட்டிய கார் கட்டுப்பாடை மீறி இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், மகளின் மீது மோதியுள்ளது.
கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் மகளின் கண்முன்னே அவரது தாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார் . பின் இருக்கையில் அமர்ந்திருந்த மகள் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Also Read : பூமியை விட்டு விலகிச் செல்லும் நிலா – அமெரிக்கா விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்..!!
யாரும் எதிர்பாராத நேரத்தில் சட்டென வந்து கார் மோதியதும் அப்பெண் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விபத்து ஏற்படுத்திய சிறுவனை பிடித்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிள்ளைகள் மீது பெற்றோர்கள் கொடுக்கும் அளவற்ற பாசத்தால் பிள்ளைகள் செய்யும் தவறுகள் பெற்றோர் கண்ணனுக்கு தெரியவில்லை . வாகனம் ஓட்ட முறையான வயதின்றி பிள்ளைகள் இதோபோன்ற விபத்துகளை ஏற்படுத்துவது பல குடும்பத்தில் பல பிள்ளைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வருவதற்கு இந்த சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு.