சீனாவில் 20 வருடங்களாக இளைஞரின் மூக்கிற்குள் விளையாடுவதற்கு பயன்படுத்தப்படும் Dice இருந்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் சீனாவில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர் தும்மல் மற்றும் சளியால் சியோமா என்ற 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் அவதியுற்று வந்துள்ளார்.
Also Read : “இதெல்லாம் ஒரு Hobby-யாப்பா?” மன அழுத்தத்தை போக்க வினோத செயலில் ஈடுபட்ட ஜப்பான் நபர்..!!
தீராத சளி தொல்லையால் படாதபாடு பட்டு வந்த அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போய்யுள்ளனர் . அந்த இளைஞரின் மூக்கிற்குள் தாயக்கட்டை (Dice) சிக்கி இருப்பது தெரிய வந்ததால் அவரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சியாமோ சிறுவனாக இருந்தபோது தெரியாமல் Dice-ஐ அவரின் மூக்கிற்குள் நுழைத்திருக்கலாம் என தெரிவித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின் மூலம் அதனை அகற்றியுள்ளனர்.