2023 உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்திய அணியின் தோல்வி – தாங்க முடியாத இளைஞர் மாரடைப்பால் மரணம்!

சென்னையில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத இளைஞர் மாரடைப்பு ஏற்பட்ட பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கடந்த அக். 5ஆம் தேதி தொடங்கிய 13ஆவது உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதன் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் ஆகியோரது அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப்பால் எளிதில் வெற்றி பெற்று 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. இதனால் இந்திய அணி சொந்த மண்ணில் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை டிராபியை இழந்தது.

இந்நிலையில், திருப்பதி அருகிலுள்ள துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஜோதி குமார் என்ற இளைஞர் தனது வீட்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த போது இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மன வேதனையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

டிராபி நமக்குத் தான் என்று ஆவலுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இந்திய அணி தோல்வி அடைந்ததை பார்த்து திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நேற்றைய தினம் இந்தியாவின் தோல்வியை நேரில் காண முடியாத ரசிகர்கள் பாதியிலேயே நடையை கட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts