தளபதியின் லியோ திரைப்படம் திரையரங்குகளில் தற்போது வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , தளபதி விஜய் , திரிஷா , பிரியா ஆனந்த் , அர்ஜுன் , கவுதம் வாசுதேவ் மேனன் . மேத்தீவ் தாமஸ் , மடோனா , சார்ஜ் மரியான் , மிஸ்கின் உளப்பட படத்தில் பணியாற்றிய ஏராளமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவிற்கு வழக்கம் போல் கெத்தாக என்ட்ரி கொடுத்த தளபதி விஜய் தனது பேச்சால் அரங்கை அதிர வைத்துள்ளார். அப்படி அவர் பேசியதில் சில சுவாரஸ்ய நிகழ்வுகளை தற்போது பார்ப்போம்.

லியோ வெற்றி விழாவில் ரசிகர்கள் குறித்து விஜய் பேசியதாவது :
எந்த எதிர்பார்ப்புமே இல்லாம என் மேல நீங்க வச்சிருக்க இந்த அன்புக்கு நான் திருப்பி என்ன செய்யப் போறேன். என் உடம்பு தோல உங்க காலுக்கு செருப்பா தச்சு போட்டாலும் போதாது. சாகும் வரை உங்களுக்கு உண்மையாக இருப்பேன்.
மக்களாகிய நீங்கள்தான் மன்னர் நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி நீங்கள் ஆணை இடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்.

கொஞ்ச நாளா சோஷியல் மீடியால உங்க கோவம்லா அதிகமா இருக்கே. ஏன்?
அதெல்லாம் வேணாம் நண்பா . இவ்ளோ கோவம்லாம் உடம்புக்கு நல்லதில்ல. நமக்கு நிறைய வேலை இருக்கு என ரசிகர்களுக்கு விஜய் க்யூட்டாக அட்வைஸ் கொடுத்தார்.
இதையடுத்து திரிஷா குறித்து பேசிய விஜய் கூறியதாவது :
“20 வயசுல ஒரு பொண்ணு ஹீரோயின் ஆவது விஷயம் இல்ல. 20 வருஷமாகவே ஹீரோயினா தக்க வைக்கிறது இருக்கே… அதுவும் அதே எனர்ஜியோட! நம்ம இளவரசி குந்தவை” என லியோ’ படத்தின் வெற்றி விழாவில் த்ரிஷாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
