அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் திரைப்படமே ‘விடாமுயற்சி’.
லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் இசையமைத்துள்ளார்.
மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே தரமாக தயாராகி உள்ள இப்படத்தில் அஜித் , திரிஷா , ஆரவ் , அர்ஜுன் என ஏராளமான நட்சத்திரங்கள் ஒன்றுகூடி நடித்துள்ளனர்.
வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘சவதீகா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அனிருத் இசையில், அறிவு எழுத ஆண்டனி தாசன் இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.