பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
அண்மையில் வெளியாகி பெரும் புயலை கிளப்பி இருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதன் அடிப்படையில் மலையாள நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது காவல் துறை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து வருகிறது.
Also Read : சைபர் குற்றங்களுக்கான புகாரை பதிவு செய்வது எப்படி..!!
ஹேமா கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி மலையாள நடிகர்கள் சித்திக், எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
விடுபட்ட பக்கங்கள் உட்பட முழுமையான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில், கேரள அரசு சமர்ப்பிக்க உள்ளது.
ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை, டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்குமாறு, முன்னதாக அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.