நடிகர் விஜய்யின் தி கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் AGS நிறுவனத்தின் மாபெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படமே தி கோட்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து இப்படத்தில் பிரஷாந்த் , பிரபுதேவா , சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
Also Read : நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்..!!
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் கடந்த மாதம் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது .வெளியான முதல் நாளில் இப்படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் எழுந்து வந்த போதிலும் வசூலில் தூள் கிளப்பி கிளப்பியது.
இந்நிலையில் இப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படம்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி தளபதியின் கோட் படம் வரும் 3 ஆம் தேதி நெட்பில்க்ஸ் OTT யில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.