மனைவி மற்றொரு ஆணுடன் பைக்கில் போவதை பார்த்து காரை விட்டு மோதிய கணவர்.. அடுத்து நடந்தது?

Spread the love

திண்டுக்கல்லில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வரும் தன் மனைவி, வேறொருவருடன் பைக்கில் செல்வதைப் பார்த்த பின்னால் காரில் சென்று கொண்டிருந்த கணவன், அவர்கள் மீது காரை விட்டு மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பிரதீப்குமார். இவரது மனைவி நந்தினி வேளாண் விரிவாக்க அலுவலக தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 மாதங்களாக, பிரதீப்குமாரும் நந்தினியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நீலாக்கவுண்டன் பட்டியில் நடைபெற்ற தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற நந்தினி, சக ஊழியரான அசோக்குமார் என்பவருடன் அவரது இருசக்கர வாகனத்தில் கூட்டம் முடிந்த பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். இதனை அவ்வழியாக காரில் சென்ற பிரதீப்குமார் பார்த்துள்ளார்.

எனவே, ஆத்திரமடைந்த பிரதீப்குமார் தனது காரை அவர்கள் சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதச் செய்ததில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அப்போது நந்தினியை மட்டும் தனது காரில் தூக்கி போட்டுக்கொண்டு படுகாயமடைந்த அசோக்குமாரை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார் பிரதீப்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர் காரை துரத்தியதால் நாயக்கனூரில் மனைவி நந்தினியை கீழே இறக்கி விட்டு தப்பிச்ச சென்றுள்ளார். ஆனால்,, அவரை தும்பிச்சம்பட்டி பகுதியில் வைத்து பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love
Related Posts