தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரியும் சம்பவம் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பதை ஏற்படுத்தி வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி கூறுகையில் :
சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவது, திருவேற்காடு நகராட்சி பிரச்சினை மட்டுமல்ல; தமிழ்நாடு முழுவதற்குமானது. நாங்களே நேரில் பார்க்கிறோம்; இ.சி.ஆர் சாலைகளில் ஆங்காங்கே மாடுகள் படுத்துள்ளன; நடமாடுகின்றன.
Also Read : நெல்லையில் பரபரப்பு – மக்கள் கூட்டம் நிறைந்த நீதிமன்ற வாயிலில் இளைஞர் படுகொலை..!!
மாடுகளை வளர்க்கும் இடம் இருந்தால், மாடுகளை வளர்க்க வேண்டும்; இடம் இல்லாவிட்டால் மாடுகளை வளர்க்காதீர். சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதோடு, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அகற்ற ஆட்சியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறோம் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.