திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அருகே ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பார்க்கிங் பகுதியில் ரவுடி அன்பு என்பவர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
Also Read : கொல்லிமலையில் அமையும் ‘இரவு வான் பூங்கா’..!!
இன்று காலையில் உடற்பயிற்சி மையத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது அன்பை வழிமறித்த மர்மக்கும்பல் அவரை கண்மூடித்தனமாக வெட்டி உள்ளது . இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அன்பு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர் .