பூமியை விட்டு நிலா மெல்ல மெல்ல விலகி செல்வதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
பூமியை விட்டு நிலா மெதுவாக விலகி செல்வதாகவும், அடுத்த 20 கோடி ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் எனவும் அமெரிக்காவைச் சேர்ந்த விஸ்கான்சின்- மடிசான் பல்கலை. ஆய்வில் அதிர்ச்சி தரும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : வயநாட்டில் 6வது நாளாக தொடரும் மீட்பு பணி – பலி எண்ணிக்கை 365 ஆக உயர்வு..!!
பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையே இதற்கு காரணம் என கூறும் விஞ்ஞானிகள், 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரமாக இருந்தது என கூறுகின்றனர்.
ஒரு ஆண்டுக்கு 3.8 செ.மீ., தூரம் நிலா நகர்ந்து வருகிறது எனவும் இதனால், தற்போது பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானிகள் சொல்வதை வைத்து பார்க்கும் பொது இன்னும் சில கோடி ஆண்டுகளில் இரவு என்பதே பூமியில் இருக்காது என்பது போல் தெரிகிறது.