தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது :
தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை; ஆந்திரா, தெலங்கானா, கேரளாவில் கல்வியின் தரம் உயர்ந்து வருகிறது அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் படிக்கின்றனர்; ஆனால் தரமாக படிக்கின்றனரா?
Also Read : ரீசார்ஜுக்கு இனி அதிக கட்டணம் இல்லை – அதிரடி உத்தரவு பிறப்பித்த TRAI..!!
கல்வித் தரத்தை உயர்த்தவே ஆல்-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது தரமான கல்வி கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும்; கல்வியின் தரம் உயர வேண்டும் .
பிரதமர் மோடி – எம்.ஜி.ஆர்., தொடர்பான எனது ஒப்பீடு சரியானது என, அ.தி.மு.க., மூத்த தலைவர்களே என்னிடம் பேசினர். எம்.ஜி.ஆர்., பாரதத்தின் ரத்னா. அ.தி.மு.க.,வின் ரத்னா கிடையாது. அவர் குறித்து பேச அனைவருக்கும் உரிமை உள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.