சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி உள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வேட்டையன். பிரம்மாண்ட பொருட் செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
Also Read : 13 ஆண்டுகால தேடல் – மனைவியை இழந்து தவிக்கும் ஜப்பான் கணவர்..!!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல முக்கிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளது.
ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .