ITamilTv

நடிகர் அஜய் கார்த்தியின் “ரேவன்” திரைப்படம் – பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!

Spread the love

அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகும் “ரேவன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகும் திரைப்படம் “ரேவன்”. நடிகர் அஜய் கார்த்தி அறிமுகமாகும் இந்த படத்தை MG STUDIOS சார்பில் தயாரிப்பாளர் APV. மாறன் உடன் இணைந்து ‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் K ஜெகன் இயக்குநராக அறிமுகாகிறார்.

இசை அமைப்பாளர் மனு ரமீசன் இசையமைக்க உள்ள இந்த படத்தில் நடிகர் அஜய் கார்த்திக்கு ஜோடியாக நடிகர் நேத்திரன் மகள் அஞ்சனா நடிக்கிறார்.
இவர்களுடன் இயக்குநர் கே பாக்யராஜ், VTV கணேஷ், வீரா, இந்துமதி, பா.அருணாச்சலேஸ்வரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மாறுபட்ட களத்தில் புதுமுகங்களின் தற்கால நவீன தலைமுறையின் கதை சொல்லும் திரைப்படமாக “ரேவன்” படம் உருவாகிறது.

இந்த திரைப்படம் பூஜையுடன் இன்று தொடங்கிய நிலையில். தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, S. S. லலித் குமார், ஃபைவ் ஸ்டார் கதிரேசன், ஃபைவ் ஸ்டார் செந்தில், விநியோகஸ்தர் கோவை அரவிந்த் மற்றும் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா, யாத்திசை இயக்குநர் தரணி ராஜேந்திரன், குட்நைட் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன், ராக்ஃபோர்ட் என்ட்டெயின்மென்ட் முருகானந்தம், அருண் விஷ்வா, ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

“ரேவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படம் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.


Spread the love
Exit mobile version