இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ள செஸ் வீரர் குகேஷ் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சமித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் இள வயது உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையை படைத்தார்.
இந்நிலையில் இளம் செஸ் வீரர் குகேஷுக்கு தமிழகம், இந்தியா என உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read : மாலையில் வெளியில் செல்லத் தடை? – கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் அண்ணா பல்கலை..!!
இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்த குகேஷ் இன்று நடிகர் ரஜினிகாந்தை தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்தார்.
ரஜினியுடனான சந்திப்பு குறித்து குகேஷ் கூறியதாவது :
நன்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார். உங்கள் அன்பான வாழ்த்துகளுக்காகவும், நேரில் அழைத்து நேரம் செலவழித்து உங்களுடைய ஞானத்தை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டமைக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.