வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள விடுதலை 2 படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘விடுதலை’ படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது . ரசிகர்களின் பேராதரவை பெற்ற இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இவர்களுடன் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
Also Read : “ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக காவல்துறை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் இரண்டாம் பாகமும் சுறுசுறுப்பாக உருவாகி வந்தது . இதில் விஜய் சேதுபதி மற்றும் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.இப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் மிரட்டலான ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .
புரட்சி ஊட்டும் வசனங்களுடன் உருவாகி உள்ள விடுதலை 2 படத்தின் ட்ரைலர் இதோ..