துருக்கி நாட்டை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி நாட்டை சேர்ந்த குப்ரா அய்குட் என்ற 26 வயது இளம் பெண் இன்ஸ்டாவில் அதிக ரீல்ஸ்களை பதிவிட்டு பிரபலமடைந்தவர் .
தொடர்ந்து பல புதுவிதமான வீடியோக்களை பதிவிட்டு வந்த குப்ரா கடந்தாண்டு தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார் . இதுகுறித்த வீடியோவும் அப்போது செம ட்ரெண்டானது.
Also Read : 24 ஆண்டுகளாக எஞ்சின் ஆயில் குடித்து உயிர்வாழும் வினோத மனிதர்..!!
இந்நிலையில் குப்ரா அய்குட் தான் வசித்து வந்த வீட்டின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவரது உடலின் அருகே கிடைத்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். அவர் கடைசியாக பதிவிட்ட வீடியோவில் ‘உடல் எடையை அதிகரிப்பது சவாலாக உள்ளது. நான் மிக விரைவில் எடையை அதிகரித்தே ஆக வேண்டும். ஆனால் தினமும் ஒரு கிலோ எடை குறைந்துகொண்டே வருகிறேன்’ என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்