ITamilTv

“இந்தியை திணிக்க”, “சமஸ்கிருதமயமாதலை தீவிர படுத்த” – ஒன்றிய அரசை கடுமையாக விளாசிய திருமா!

Spread the love

தொல்.திருமாவளவன் (Thirumavalavan) பேட்டி…

மொழிப்போர் தியாகிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்..

இந்திய ஒன்றிய அரசு மோடி அரசு இந்தியா முழுவதும் ஒரே மதம் இருக்க வேண்டும் ஒரே மொழி இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் செயல் திட்டங்களை வரையறுத்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்தியை திணிப்பதற்கும் சமஸ்கிருதமயமாதலை தீவிர படுத்துவதற்கும் கோடான கோடி ரூபாயை இந்திய ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்து வேலை செய்து வருகிறது என தொல்.திருமாவளவன் (Thirumavalavan) கூறியுள்ளார்…

பிராந்திய மொழி பேசகூடியவர்களை இந்தி பேசக் கூடியவர்களாக மாற்ற வேண்டும் என்கிற அடிப்படையிலே செயல்பட்டு வருவது மிக மோசமான ஒரு பாசிசப்போக்கு இந்த நாளில் இந்த பாசிச போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது..

தமிழ் மொழி மட்டும் அல்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும், அலுவல் மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும் தமிழை மட்டும் கூறவில்லை, தமிழுக்கு மட்டும் நாம் கோரிக்கை விடுக்கவில்லை இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன அதில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற வேண்டும் .

பிரதமர் மோடிக்கு எதிராக வன்முறை, வெறியாட்டம் குறித்த ஆவணப்படம் ஒன்றை பிபிசி வெளியிட்டு உலகம் தழுவி அளவில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது உண்மை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது, தன்னுடைய குற்றத்தை உணர்ந்து பிரதமர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும்..

எந்த அளவுக்கு சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பை அவர் விதைத்திருக்கிறார் வன்முறையை தூண்டி இருக்கிறார், ஒரு மிகப்பெரும் இனக் கொலையை செய்வதற்கு காரணமாக இருந்திருக்கிறார் என்பதை இன்றைக்கு பிபிசி ஆதாரங்களோடு வெளியிட்டு இருக்கிறது பிபிசியையும்அவர்கள் அச்சுறுத்தி இருக்கிறார்கள்.

இத்தகைய நிலையில், இந்திய அளவிலே ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்கிற கருத்தை அவர்கள் மீண்டும் முயற்சிக்கின்றனர்,
இது வெறும் இஸ்லாமியர் கருத்து அவர்களுக்கு எதிரான அரசியலாக மட்டும் முடியாது பிற மொழி பேசக்கூடிய மக்களுக்கு எதிரான அரசியலாகவும் முடியும்…

Thirumavalavan

ஒரே தேர்தல் ஒரே தேசம் என்கிற முழக்கத்தை முன் வைக்கிறார்கள். இவையெல்லாம் மிகவும் ஆபத்தான பாசிச அரசியல் என்பதால் தான் பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும் சனாதன சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் ஓங்கி உரைத்து முழங்கி வருகிறோம்.

அந்த அடிப்படையில் தான் அந்த கருத்தின் பிரதிநிதியாக இருக்கிற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே திரும்ப பெற வேண்டும் அவர் தமிழ்நாட்டில் ஆளுநராக நீடிப்பது நல்லது அல்ல தமிழ்நாட்டு அரசியலுக்கு தமிழ்நாட்டுக்கும் முரணாக இருக்கும் என்பதை வலியுறுத்தி வருகிறோம் ..

அதன் அடிப்படையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் அவர்களின் அழைப்பை தேநீர் விருந்துக்கான அழைப்பை புறக்கணிக்கிறோம் அதில் பங்கேற்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம்…


Spread the love
Exit mobile version