சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்..!!

தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கி ஆங்காங்கே வெளுத்துவாங்கி வரும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஆங்காங்கே தற்போது மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் :

  • சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளில் கடந்தாண்டு இதே நாளில் சராசரி நீர் இருப்பு 57% மட்டுமே இருந்த நிலையில், இந்தாண்டு 73.95%-ஆக அதிகரித்துள்ளது .
  • இந்த 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், கடந்தாண்டு இதே நாளில் 6.702 டிஎம்சி நீர் மட்டுமே இருந்த நிலையில், இந்தாண்டு 8.694 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

சென்னை குடிநீர் ஏரிகளில் சராசரி நீர் இருப்பு – 73.95%

செம்பரம்பாக்கம் – 86.01%
புழல் – 80.64%
பூண்டி – 57.78%
சோழவரம் – 54.58%
கண்ணன்கோட்டை – 88.2%

Total
0
Shares
Related Posts