ITamilTv

துருக்கியை போலவே இந்தியாவில் வரபோகும் மோசமான நிலநடுக்கம்.. பேரதிர்ச்சி கொடுக்கும் விஞ்ஞானியின் தகவல்!

Spread the love

துருக்கியை போலவே இந்தியாவில் வரபோகும் மோசமான நிலநடுக்கம்.. பேரதிர்ச்சி கொடுக்கும் விஞ்ஞானியின் (scientist’s) தகவல்..

துருக்கி மற்றும் சிரியாவைத் தாக்கிய 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கணிக்க முடியாத உயிர் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த நிலநடுக்கம் பற்றி முன்கூட்டியே நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் (scientist’s) “ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ்”, கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய – தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கூடிய விரைவில் அல்லது தாமதமாக பதிவாகும்” என்று கூறியுள்ளார். அப்போது அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

scientist's

இந்நிலையில், துருக்கியில் ஏற்பட்டதை போல் மிகவும் மோசமான நிலநடுக்கம் குஜராத், பீகார் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக புவியியல் ஆய்வாளர் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் குஜராத், நாகலாந்து அசாம், சிக்கிம், இமாச்சல பிரதேசம், மணிபூர், ஜம்மு காஷ்மீர் மற்றும் பீகார் ஆகிய 8 மாநிலங்கள் நில அதிர்வு மண்டலத்தின் கீழ் வருவதால், இந்த பகுதிகளிலும் துருக்கியைப் போல் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான், இந்தியா வழியாக இந்திய பெருங்கடலில் முடிவடையும் எனவும் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் எச்சரித்து இருப்பது இந்தியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love
Exit mobile version