அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மட்டுமில்லை என்னையும் இரண்டு முறை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது என மாபெரும் செல்வந்தரும் டெஸ்லா உரிமையாளருமான எலான்மஸ்க் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நேற்று கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் காதில் காயத்துடன் அவர் உயிர் தப்பினார். முன்னாள் அதிபர் மீதான இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தன் மீதும் இரு முறை கொலை முயற்சி நடந்துள்ளதாக டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான்மஸ்க் கூறியுள்ளார்.
தயவு செய்து உங்களது பாதுகாப்பை 3 மடங்கு அதிகரியுங்கள். டிரம்ப்பை நெருங்கி வந்தால், உங்களையும் கொலை செய்ய முயற்சிப்பர் என சமூக வலைதளத்தில் பயனாளர் ஒருவர் எலான் மஸ்க்கிற்கு கோரிக்கை விடுத்திருந்தார் .
இதற்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க் கூறிருப்பதாவது :
ஆபத்தான நேரத்தை கடந்துள்ளேன். கடந்த 8 மாதங்களில் இரண்டு பேர் என்னை வெவ்வேறு தருணங்களில் கொலை செய்ய முயற்சித்தனர். டெஸ்லா அலுவலகம் அருகே துப்பாக்கியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.