plane made an emergency landing : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 170 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து, அகமதாபாத் செல்வதற்காக இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6E-129 விமானம் புறப்பட்டது.
இந்த விமானத்தில் விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் உள்பட மொத்தம் 170 பேர் இருந்தனர்.
இதையும் படிங்க : திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்ட்டில் பசை வடிவில் தங்கம் கடத்தல்….
இந்நிலையில், விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் விமானத்தின் லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் இன்று மதியம் 2.40 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதன் பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் plane made an emergency landing.
இதையும் படிங்க : பெண் கிராம நிர்வாக அலுவலரை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி – வானதி ஆவேசம்!