பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 6 சீசன்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட பல பிரபலங்கள் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழ்கின்றனர் .
இந்நிலையில் மக்களின் மனம் கவர்ந்த இந்நிகழ்ச்சியின் 7வது சீசன் மிக விரைவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. ஆனால் இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவின் தேதி இன்று வரை அறிவிக்கப்படவில்லை .
இந்நகழ்ச்சி குறித்து இதுவரை 2 அட்டகாசமான புரொமோக்கள் வெளியான நிலையில் கமல்ஹாசன் பிக் பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்தார் . அது என்னவென்றால் இதுவரை இல்லாமல் இந்த 7வது சீசனில் இரண்டு வீடு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .
கமல்ஹாசனின் இந்த சர்பரைஸ் அறிவிப்பால் திகைத்துப்போன ரசிகர்கள் அடுத்து என்ன அப்டேட் கொடுப்பார்கள் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த 7வது சீசனில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் என இணையத்தில் ஒரு பெரிய பெயர் பட்டியல் உலா வருகிறது . அந்தவகையில் இன்றும் ஒரு லிஸ்ட் வந்துள்ளது.
இணைய வாசிகள் உருவாக்கிய இந்த லிஸ்டில் தொகுப்பாளினி பாவனா, கிராமிய பாடகி ராஜலட்சுமி.ரேகா நாயர் , பயில்வான் ரங்கநாதன் , மகாபா ,குரேஷி ,புகழ், மோனிஷா,விசித்திர, ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது, இவர்களில் பலர் விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர்கள் என்பதால் ஒருவேளை இருக்குமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.