ITamilTv

Thiruvenkadu-”மாயமான அம்மன் தாலிச் சங்கலி..” திருவேற்காட்டில் நடந்தது என்ன?

Thiruvenkadu

Spread the love

Thiruvenkadu –திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலையில் இருந்த 8 சவரன் தாலி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான அம்மன் கோயில்களுள் ஒன்று. இந்தக் கோயிலுக்குப் பின்னால் நிறையக் உண்மை கதைகள் உள்ளன,

ஆரம்பத்தில் எறும்புப் புற்று இருந்ததாகவும், அதைத் தெய்வமாக மக்கள் வழிபட்டதாகவும் கருத்துக்கள் உள்ளது.

பின்னர் அம்மன், பக்தர்களின் கனவில் தோன்றி கோயிலைக் கட்டச் சொன்னதாகவும் எடுத்துரைக்கப்படுகிறது.

மற்றொரு கதையில், சிவபெருமான் கைலாசத்திற்குச் செல்லும் போது, ​​அவர் தனது உடலில் உள்ள சாம்பலை வேர்க்கண்ணியிடம் கொடுத்து ஐந்து வேலைகளைச் செய்யும்படி கூறினார்.

அந்தரக்கண்ணி, ஆகாயகன்னி, பிரம்மகன்னி என ஏழு அம்சங்களில் வேர்க்கண்ணி தன்னை உருவாக்கி கொண்டவள்.

மதுரையில் மீனாட்சி, காஞ்சிபுரத்தில் காமாட்சி, காசியில் விசாலாக்ஷி.

இதையும் படிங்க: Murugan Song | ”அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்..”தினமும் கேட்க வேண்டிய முருகன் பாடல்!

இறுதியாக திருவேற்காட்டில் ஏழாம் வடிவம் கொண்டு வேற்கண்ணி அவதரித்தாள். இப்பெயர் வேல் (ஈட்டி) மற்றும் கன்னி (கண்கள்) என்பதிலிருந்து பெறப்பட்டது.

இங்கு பிரதான தெய்வமான கருமாரியம்மன் ரேணுகா பரமேஸ்வரியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1756241855946379711?s=20

மாயமான அம்மன் தாலிச் சங்கலி:

இந்த நிலையில் , திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலையில் இருந்த 8 சவரன் தாலி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவேற்காடில் பிரசித்திபெற்ற ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இதையும் படிங்க: தை அமாவாசை 2024 : யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.. நேரம்?

இக்கோவிலில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவேற்காடு(Thiruvenkadu) கருமாரியம்மன் கோவில் கருவறையில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்த 8 சவரன் மதிப்புள்ள தாலிச் சங்கலி அண்மையில் திடீரென மாயமானது.

இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக கோயில் பொறுப்பாளர் கனகசபரி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் கோயிலில் தின ஊதியத்தின் அடிப்படையில் அர்ச்சகராகப் பணியாற்றும் சண்முகம் என்பவர் அம்மன் தாலியை திருடியது தெரிய வந்தது.

இதனையடுத்து அர்ச்சகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Spread the love
Exit mobile version