Site icon ITamilTv

ARR விவாகரத்துக்கு இதுதான் காரணம்!! தனுஷை ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்!!

Spread the love

இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானுவின் பிரிவு. 29 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து மூன்று பிள்ளைகள் இருக்கும் சூழலில் அவர்களது பிரிவு பலரையும் சோகத்தில் தள்ளியிருக்கிறது. இருவரின் பிரிவுக்கும் காரணங்களாக பல யூகங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் இருவருமே தங்களது தனியுரிமைக்கு மதிப்பு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் சமீப காலமாக பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்திருக்கிறது. தனுஷ் – ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் – சைந்தவி, இமான் – மோனிகா, ஜெயம் ரவி – ஆர்த்தி என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. தொடர்ந்து இப்படி பிரபலங்கள் விவாகரத்து பெற்றுவருவதால் ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அந்த லிஸ்ட்டில் ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்திருக்கிறார்.

உலக அளவில் ஃபேமஸான இசையமைப்பாளராக வலம் வரும் ரஹ்மான் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இரண்டு பேரும் புரிதலோடும், காதலோடும் தங்களது வாழ்க்கையை அருமையாக நகர்த்திவந்தார்கள். மேலும் அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அவர்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை ரசிக்க வைத்தது.

சூழல் இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர்கள் பிரிவதாக அறிவித்திருக்கிறார்கள். சாய்ரா பானு நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில், “பல வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை எடுத்திருக்கிறேன். எங்களுடைய உறவில் அழுத்தம் உருவாகிவிட்டது. ஆழமான அன்பை வைத்திருந்தாலும் பதற்றங்களும், சிரமங்களும் எங்களுக்கிடையே தீர்க்க முடியாத ஒரு இடைவெளியை உருவாக்கிவிட்டது” என்று தெரிவித்திருந்தார்.

முதலில் சாய்ரா பானு இப்படி அறிவிப்பை வெளியிட்டதால் ஏ.ஆர்.ரஹ்மானின் பதில் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்திருந்தது. அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “30ஆவது வருட திருமண வாழ்க்கையை பூர்த்தி செய்வோம் என்று நாங்கள் நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால் எங்கள் எண்ணங்களே எதிர்பார்க்காத ஒரு முடிவு கிடைத்திருக்கிறது. உடைந்த இதயங்களின் வலியை காண்கையில் கடவுளின் சிம்மாசனமும் நடுங்கும் அப்டீன்னு சொல்லிருக்காரு. ரஹ்மானும் தன்னுடைய திருமண வாழ்வின் முறிவு பற்றி உறுதி செய்துவிட்டதால் அவரது ரசிகர்கள் சோகமடைந்திருக்கின்றனர்.

இது ஒருபக்கம் இருக்க இந்த விவாகரத்து விவகாரத்திலும் தனுஷை ரவுண்டு கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் நெட்டிசன்ஸ். அதாவது ஏ.ஆர்.ரஹ்மான் கடைசியாக இசையமைத்தது தனுஷின் ராயன் படம்தான். ஏற்கனவே ஜிவி பிரகாஷ் – சைந்தவி, ஜெயம் ரவி – ஆர்த்தி, ஏ.எல்.விஜய் – அமலா பால் ஜோடிகளின் விவாகரத்தில் தனுஷின் பெயர் பலமாகவே அடிபட்டது.

அதுமட்டுமின்றி விக்னேஷ் சிவன் – நயன்தாரா விவகாரத்தில்கூட அவர்கள் ஒற்றுமையாக இருப்பது பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் ஆவண பட விஷயத்தில் பிரச்னை செய்தார் என்று மீம்ஸ்கள் பறந்தன. சூழல் இபப்டி இருக்க ரஹ்மான் கடைசியாக தனுஷ் படத்துக்கு இசையமைத்ததால்தான் அவரது திருமண வாழ்க்கையில் புயல் அடித்திருக்கிறது.

தனுஷுக்கு என்ன ராசியோ என்று பலரும் கிண்டலாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். அதேசமயம் இப்படி பேசுவது எல்லாம் வன்மத்தின் உச்சம்தான். மற்றவர்களின் விவாகரத்துக்கும் தனுஷுக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லை என்று அவரது ரசிகர்களும் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.


Spread the love
Exit mobile version