Site icon ITamilTv

Thooku Durai படத்தின் Trailer வெளியானது..!!

Thooku Durai

Thooku Durai

Spread the love

யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள தூக்குதுரை (Thooku Durai) படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது கரண்ட் ட்ரெண்டில் காலகாப்பான நகைச்சுவை நாயகனாக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு.

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி ,தெலுங்கு என பல மொழிப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வரும் யோகி பாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து கலக்கி வருகிறார்.

தளபதி விஜய் அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலிவுட் பாஷா ஷாருகான் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து கெத்து காட்டி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் தூக்குதுரை. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், இயக்கியுள்ள இப்படத்தில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார் .

கலகலப்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் யோகிபாபுவுடன் இனியா, ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

(Thooku Durai) இப்படதிக்ரு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்ய, மனோஜ் இனிமையான மெட்டுக்களை போட உள்ளார்.

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி உள்ள இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் கமன்ட் செய்து வந்த நிலையில் தற்போது படக்குழு சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளது.

அது வேறு ஒன்றும் இல்லை இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது படக்குழு .

பொதுவாக காமெடி பேய் படங்களுக்கு தமிழ் சினிமாவில் என்றுமே தனி மவுசு இருந்து வருகிறது . இந்த படமும் அதே டெம்ப்ளேட்டில் தான் உருவாகியுள்ளது .

பழங்கால கிரீடம் ஒன்றை திருட சென்ட்ராயன், பால சரவணன் குழு கிராமம் ஒன்றுக்கு திருட்டு தனமாக வருகிறார்கள்.

அப்படியே இந்த பக்கம் தன் காதலி இனியாவின் திருமணத்தை தடுத்து அவரை தூக்கிச்செல்ல யோகிபாபு வருகிறார்.

Also Read : https://itamiltv.com/singapore-saloon-moive-trailer-released/

சென்ட்ராயன் குழுவுக்கும் யோகி பாபுவுக்கும் இடையே மொத்தப் படமும் நகரப் போகிறது என்பதை ட்ரைலர் தெள்ளத்தெளிவாக சொல்கிறது .

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் ட்ரைலர் போல படமும் வெற்றி பெறுமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

இப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version