குமரி மாவட்டத்தில் மழை, வெள்ள நிவாரணம் பெறாதவர்களுக்கு இன்று நிவாரணம் வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
சென்னை உளப்பட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் ஒரு காட்டு காட்டிய நிலையில் கடந்த மாதம் புயலே இல்லாமல் கனமழையால் தென் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி திருநெல்வேலி நெல்லை தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் அப்பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கடும் சிரமத்திற்குஆளாகினர் . இந்நிலையில் தென் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதில் நெல்லை, தூத்துக்குடியில் கடுமையாக வெள்ளம் பாதித்த வட்டங்களில் உள்ள மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம்; லேசான பாதிப்புகளுக்கு ரூ.1,000 நிவாரணம் என்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் மக்களுக்கு நிவரான தொகை படிப்படியாக கொடுக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் மழை, வெள்ள நிவாரணம் பெறாதவர்களுக்கு இன்று நிவாரணம் வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
வாங்காத மற்றும் விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்கள், தங்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலை கடைகளில் நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.