பீஸ்ட் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்கள்

three-updates-of-thalapathi-vijay-in-beast-movie
three updates of thalapathi vijay in beast movie

நெல்சன் – விஜய் கூட்டணியில் உருவாகும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தில் செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

three updates of thalapathi vijay in beast movie

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில், பீஸ்ட் படக்குழு அடுத்தடுத்து 3 அப்டேட்டுகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 13-ந் தேதி நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அவரது போஸ்டரை வெளியிட உள்ளார்களாம். அதையடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை நாட்களான அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளிலும் பீஸ்ட் படத்தின் இரண்டு முக்கியமான அப்டேட்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Total
0
Shares
Related Posts